தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Nov 2021 5:23 PM IST (Updated: 24 Nov 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்து போனார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 28). இவர் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், இவர் கம்பிரசர் மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருந்த ஒரு இரும்பு குழாயை எடுத்தாராம். அப்போது அந்த குழாயில் பரவி இருந்த மின்சாரம் ஆனந்தகுமார் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story