திருச்செந்தூரில் இருந்து தூர்தர்தஷன் தரைவழி ஒளிபரப்பு டிசம்பர் 31ந்தேதி முதல் நிறுத்தம்
திருச்செந்தூரில் இருந்து தூர்தர்தஷன் தரைவழி ஒளிபரப்பு டிசம்பர் 31ந்தேதி முதல் நிறுத்தம்
தூத்துக்குடி:
நெல்லை பிரசார் பாரதி தூர்தர்ஷன் உதவி பொறியாளர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இயங்கி வருகின்ற குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் (எல்.பி.டி.) சேனல் எண் 30(.) அலைவரிசை 543.25 மெகா ஹெர்ட்ஸ் தூர்தர்ஷன் பொதிகை தரைவழி ஒளிபரப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.
தூர்தர்ஷனின் அனைத்து சேனல் ஒளிபரப்புகளும் டி.டி.எச். சேவை மூலம் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story