தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:32 PM IST (Updated: 24 Nov 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சாலை சீரமைக்கப்படுமா? 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், சேரன்குளம்.
வடிகால் வசதி வேண்டும் 
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பரசலூர் ஊராட்சியில் நக்கீரர் தெரு உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  மேலும் சாலையில் வடிகால் வசதி இல்லை.  இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த சாலையில் நடந்து  செல்ல முடிவதில்லை.  மேலும் இந்த சாலையின் வழியாக இரவு நேரங்களில் வருவோர் பள்ளம் எது? சாலை எது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தருவதோடு வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்
பொதுமக்கள், நக்கீரர் தெரு, செம்பனார்கோவில்.
பன்றிகள் தொல்லை 
காரைக்கால் மாவட்டம்  திரு-பட்டினம் ஓடுதுறை கிராமத்தில் நடு ஓடுதுறை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட தினமும் ஏராளமானோர்  சென்று வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த சாலையோரம் பன்றிகள் அதிகம் சுற்றி வருகின்றன. மேலும் சாலைகளின் குறுக்கே பன்றிகள் ஓடும் போது சிறு- சிறு விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் 

ராஜேஷ், திரு-பட்டினம் காரைக்கால்.


Next Story