மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை + "||" + Man sentenced to 37 years in prison for sexually abusing girl

வாலிபருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை

வாலிபருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
திருப்பூர், 
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
போக்சோ வழக்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலை வேடப்படி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வயது 25. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபட்டு பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த உடுமலை மகளிர் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் செய்த பிரிவின் கீழ் கார்த்திக், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கார்த்திக்கின் தந்தை மாரிமுத்து, தாய் வீரம்மாள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
37 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வாழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி நேற்று  தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக கார்த்திக்குக்கு 2 ஆயுள் தண்டனை உள்பட மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ரூ.30 ஆயிரம் அபராதம், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வீரம்மாள், மாரிமுத்து ஆகியோருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து  தீர்ப்பு கூறினார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட உடுமலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வியை போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.