விக்கிரவாண்டி அருகே குட்டையில் செத்து மிதந்த மீன்கள்
விக்கிரவாண்டி அருகே குட்டையில் செத்து மிதந்த மீன்கள்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்( வயது 27). விவசாயியான இவர் தனது நிலத்தில் மீன் குட்டை அமைத்து 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டையில் உள்ள மீன் குஞ்சுகள் தொடர்ந்து செத்து மிதந்து வருகின்றன. குட்டையில் யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்து இருக்காம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன்கள் செத்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story