5 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்


5 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:10 AM IST (Updated: 25 Nov 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

5 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

திருச்சி, நவ.25-
திருச்சி மத்திய மண்டலத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாற்றப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விதுன்குமார் முசிறி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவராமன் தற்போது லால்குடி போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். மேலும் பெரம்பலூர் மாவட்டம் குழந்தை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கலா அதே மாவட்டத்தில் குழந்தை தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். லால்குடி இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் பிறப்பித்துள்ளார்.

Next Story