மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம் + "||" + Relatives struggle on the 2nd day

கள்ளக்குறிச்சியில் உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

கள்ளக்குறிச்சியில் உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அரிகிருஷ்ணன்(வயது 16), நிவேதா(16). இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். சோமண்டார்குடியில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதற்கிடையில் அரிகிருஷ்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி உறவினர்கள் நேற்று 2-நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைத்தனர்.