மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்


மாவட்டத்தில்  கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 26 Nov 2021 12:08 AM IST (Updated: 26 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அன்னவாசல்:
தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திகொண்டனர். அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டி, வீரப்பட்டி, முத்துகாடு, கீழக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். 
இதேபோல் அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், பேரூராட்சிதுறையினர், ஊராட்சி துறையினர், வருவாய்துறையினர், பள்ளிகல்வி துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரையூர்
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சூரப்பட்டி, ஒலியமங்கலம், இடையாத்தூர், அரசமலை, சித்தூர், கூடலூர், வெள்ளக்குடி உள்பட பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ் செல்வம், பொன்னமராவதி தாசில்தார் (பொறுப்பு) பழனிச்சாமி, காரையூர் மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், சதாசிவம் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் காயாம்பட்டி ஊராட்சி மாங்கநாம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 76 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி 20 பேருக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 56 பேருக்கும் போடப்பட்டது.

Next Story