நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான நிர்வாகிகள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஜெய்பீம் என்ற பெயரில் அண்ணல் அம்பேத்கரை அடையாளப்படுத்தி வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வன்னியர் சமூகத்தை வில்லனாக சித்தரித்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் வன்னியர் சமூகத்தினரிடையே சாதி வன்மத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதனை தயாரித்த ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story