ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
அரக்கோணம்
தக்கோலம் - திருவலங்காடு சாலையின் குறுக்கே உள்ள கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரை அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள், தக்கோலம் போலீசார் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடினர். பின்னர் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணியை தொடங்கினர். அப்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பதும், கூலி தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story