மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்


மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
x
தினத்தந்தி 26 Nov 2021 6:20 AM IST (Updated: 26 Nov 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி, நவ
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று, நாளையும் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மேலும் வருகிற 29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக வருகிற 29-ந் தேதி அன்று தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரைப்படி இந்த நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள்  உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story