அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் சாமி தரிசனம் செய்தார். அவர் சாதாரண சாமியார்களை போன்று இல்லாமல் நவநாகரீக உடையில் வந்திருந்தார். கழுத்து நிறைய நககைளையும், கண் இமையிலும், உதட்டிலும் சாயம் பூசி இருந்தார். அவர் அகில இந்திய யுவமோட்சா தர்மச்சாரியா பட்டம் பெற்றவர் என்றும், அவரது பெயர் ஸ்ரீபவித்ரா காளிமாதா என்றும் அவருடன் வந்த சீடர்கள் தெரிவித்தனர். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் கோவிலில் பக்தர்களுக்கு குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஈசன் என்னை அழைத்ததால் இந்த பூமிக்கு வந்து உள்ளேன். இனி திருவண்ணாமலையில் நல்லதே நடக்கும். ஒருவருக்கு தண்டனை கொடுப்பதற்கு ஈசன் காளியைத் தான் அனுப்புவார். ஈசனிடம் வரம் பெற்று அதை நல்வழியில் பயன்படுத்தாமல் தீயவழியில் பயன்படுத்துவர்களை அழிப்பதற்காக இந்த எல்லைக்கு காளிமாதா வந்து இருக்கேன் என்றார்.
மேலும் நான் சாமியார் இல்லை. ஈசனும், மாதாவும் சொல்லும் வேலையை செய்வேன் என்றார். தொடர்ந்து அவர் கோவிலில் இருந்த பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி விட்டு சென்றார். இதனால் சிறிது நேரம் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story