வெம்பக்கோட்டை அணையில் அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு
வெம்பக்கோட்டை அணையில் அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த கன மழையினால் அணையின் நீர்மட்டம் 5 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது வரை சிவகாசிக்கு தினமும் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் வெம்பக்கோட்டை அணையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணையைஅசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.விடம் கூறினர். தொடர்ந்து அவர் வெம்பக்கோட்டை அணையின் நீர்வரத்து, கொள்ளளவு மற்றும் தற்போதைய நீர்மட்டத்தை பார்வையிட்டார். வெம்பக்கோட்டை அணையிலிருந்து சிவகாசிக்கு செல்லும் பழுதடைந்த குழாயை ஆய்வு செய்தார். அதை உடனடியாக சரி செய்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Related Tags :
Next Story