அழகர்கோவில் இடத்தை ரூ.14 லட்சத்திற்கு விற்று மோசடி


அழகர்கோவில் இடத்தை ரூ.14 லட்சத்திற்கு விற்று மோசடி
x
தினத்தந்தி 28 Nov 2021 12:49 AM IST (Updated: 28 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

அழகர்கோவில் இடத்தை ரூ.14 லட்சத்திற்கு விற்று மோசடி

மதுரை
மதுரை வண்டியூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி ரகு (வயது 31). வண்டியூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகராமு. இவர் தன்னிடம் உள்ள வீட்டை விற்பதாக ராஜபாண்டிரகுவிடம் தெரிவித்து அதன் விலை ரூ.14 லட்சம் என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்தப்படி ரூ.14 லட்சத்தை ராஜபாண்டிரகு அவரிடம் கொடுத்து அந்த வீட்டை தனது பெயரில் பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அவர் அந்த வீட்டை பதிவு செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜபாண்டிரகு அந்த வீடு குறித்து ஆவணங்களை பத்திர பதிவு அலுவலகத்தில் சோதனை செய்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதில் அழகர்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டை தனக்கு விற்பனை செய்ய முயன்று பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் செண்பகராமு மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story