பாம்பன், மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செ.மீ. மழை


பாம்பன், மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செ.மீ. மழை
x
தினத்தந்தி 28 Nov 2021 4:47 PM GMT (Updated: 28 Nov 2021 4:47 PM GMT)

பாம்பன் மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செமீ மழை பெய்தது. சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின.

பனைக்குளம், 
பாம்பன், மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செ.மீ. மழை பெய்தது. சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின.
கனமழை
ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மண்டபம், உச்சிப்புளி, பனைக்குளம், ஆற்றங்கரை, பெருங்குளம், சுந்தரமுடையான், வேதாளை உள்ளிட்ட பல ஊர்களிலும் நேற்றுமுன்தினம் இரவு நல்ல மழை பெய்தது.
குறிப்பாக மண்டபம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் மண்டபம் கிழக்கு தெரு, ஏ.கே.எஸ். தோப்பு மற்றும் மண்டபம் முகாம் எதிரே உள்ள பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
11 செ.மீ. மழை
இதனிடையே மண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழையுடன் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனிஸ்டன், நிர்மல் என்பவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் நங்கூர கயிறு அறுந்து பலகை உடைந்து கடலில் மூழ்கின. 
கடலில் மூழ்கிய இந்த இரண்டு விசைப்படகுகளையும் நேற்று மீனவர்கள் மீட்டு கரையில் ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மண்டபத்தில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் 11 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவின்படி, மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா ஆலோசனையின்படி மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் பணியாளர்கள் இரவு-பகலாக மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை பாதிப்புகளை ஆர்.டி.ஓ. மன்சூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்ெகாண்டார்.
பாம்பனிலும் கொட்டி தீர்த்த மழை
ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வேர்க்கோடு, இந்திரா நகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல் பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் 11 செ.மீ. மழை பதிவானது. இதனால் சின்னப்பாலம், தோப்புக்காடு, சின்ன பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சின்னபாலம், தோப்புக்காடு உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் மழை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. பாம்பனில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை ஊராட்சி தலைவர் அகிலா பேட்ரிக், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினர். தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழையால் விக்டோரியா நகர் பகுதியில் வீடு மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

Related Tags :
Next Story