திருச்சி ஜங்ஷன் அருகே ரெயில் தடம் புரண்டது


திருச்சி ஜங்ஷன் அருகே ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:29 AM IST (Updated: 30 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் அருகே ரெயில் தடம் புரண்டது. பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி, நவ.30-
திருச்சி ஜங்ஷன் அருகே ரெயில் தடம் புரண்டது. பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரெயில் தடம் புரண்டது
திருச்சி ஜங்ஷன் கிராப்பட்டி பாலம் அருகே ரெயில்வே யார்டு உள்ளது. இந்த யார்டில் இருந்து நேற்று பகல் 12.25 மணி அளவில் 18 பெட்டிகளுடன் ரெயில் ஒன்று பராமரிப்பு பணிக்காக சென்னை பெரம்பூருக்கு கொண்டு செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை.
அப்போது ரெயிலின் ஒரு பெட்டியின் 4 சக்கரங்கள் திடீரென தடம் புரண்டது. இதில் அந்த சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி ஜல்லிக்கற்கள் மீது சில அடி தூரம் ஓடியது. சத்தம் கேட்டவுடன் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்தில் பாதிப்பு இல்லை
தகவல் அறிந்து அங்கு ரெயில்வே என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்றனர். தடம் புரண்ட ரெயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். பகல் 1.30 மணி அளவில் தடம் புரண்ட ரெயிலை சரி செய்துமீண்டும்தண்டவாளத்தில் நிறுத்தி இயக்கி சென்றனர். அதிர்ஷ்டவசமாக தடம் புரண்ட ரெயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இதனால் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story