மாவட்ட செய்திகள்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மற்றும் வர்த்தகர் பிரிவு சார்பில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரிதா, எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் குணசேகரன், வக்கீல் பிரிவு நிர்வாகி முனுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. கர்நாடக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பில் செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்