பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி விழுப்புரத்தில் பா ஜ க வினர் மனித சங்கிலி போராட்டம்
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி விழுப்புரத்தில் பா ஜ க வினர் மனித சங்கிலி போராட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை பாரதீய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநில அரசு, பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாவட்ட தலைவர் துரை. சக்திவேல் தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் கார்த்திக், கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன், சிவதியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமஜெயக்குமார், பாண்டியன், மாநில பட்டியல் அணி செயலாளர் ரகு, மாவட்ட துணைத்தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச்செயலாளர் சாய்சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபுசண்முகம், தர்மராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்றபடி போராட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story