கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில், ஆண்டாள் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மடவார்வளாகத்தில் புகுந்த வெள்ள நீரை கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மலை பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகள், ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், தாசில்தார் ராமமூர்த்தியிடம் கண்மாய்கள் உடையாத வண்ணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும் படி கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story