தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 5:35 PM GMT (Updated: 3 Dec 2021 5:35 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

தடுப்பு சுவர் தேவை
கடுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தபுரம் கிராமத்தில் மலை பகுதி உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த மாதம் பெய்த மழையால் மலையின் அடிவார பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைகாலங்களில் இதுபோல் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்ட பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே,போர்க்கால அடிப்படையில் மலையின் அடிவார பகுதியில் தடுப்புசுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                     -பாக்கியநாதம், அனந்தபுரம்.
குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
கோதநல்லூர்  பேரூராட்சிக்கு உட்பட்ட மாறாங்கோணம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.                    
-பிரவீன்குமார், மண்ணெடுத்தான்விளை தெரு.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட தோவாளை வேல்முருகன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தெருவின் நடுவே பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தா.தங்கப்பன்,தோவாளை.
ஓடையில் ஆக்கிரமிப்பு
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல் விலக்கில் இருந்து தெற்கு தேரிவிளை, கணியான்விளை வழியாக சம்புகுளம் கால்வாய் மணக்குடி கடல் பகுதி வரை இருந்தது. இந்த ஓடை வழியாக தண்ணீர் கடலுக்கு சென்றது. காலப்போக்கில் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது பெய்த மழையால் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -சிவகுமார், தெற்கு தேரி.

சாலையை சீரமைக்க வேண்டும்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சரவணந்தேரி தெற்கு தெருவில் 15-க்கும்  மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் சாலை முறையாக அமைக்கப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முைறயாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                        -சுகந்தா, சரவணந்தேரி.   
மின்விபத்து ஏற்படும் அபாயம்
நாகர்கோவில் புன்னைநகர் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மரம் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்க எடுக்க வேண்டும். 
 -செந்தில்குமார்,
 புன்னைநகர்.
புதர் அகற்றப்பட்டது
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையான்குளம் வடக்குப்பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. அந்த கிணற்றை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை அகற்றி பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மை படுத்தினர். நடவடிக்கை எடுத்த துறையினரையும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story