விருதுநகரில் தடகளப்போட்டிகள்


விருதுநகரில் தடகளப்போட்டிகள்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:01 AM IST (Updated: 4 Dec 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தடகளப்போட்டிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர், 
விருதுநகரில் தடகளப்போட்டிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். 
தடகளப்போட்டி 
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட தடகள கழகத்தின் சார்பில் 2 நாள் தடகளப்போட்டிகள் நேற்று தொடங்கியது. கலெக்டர் மேகநாத ரெட்டி தேசிய கொடியேற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஒலிம்பிக் கொடி ஏற்றினார்.
 மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தடகள கொடி ஏற்றினார். இப்போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதிற்கு உட்பட்டோர், 20 வயதுக்குட்பட்டோர் போன்ற பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
பாராட்டு 
 போட்டிகளில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். அதிக புள்ளிகள் பெறும் தனிநபருக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும்.
அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள கழகத்தின் சேர்மன் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் நிர்வாகிகள் குவைத் ராஜா சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story