வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஓடப்பட்டி கிரா மத்தில் கடந்த 2-ந்தேதி இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் 5 வீடுகள் மீது பெட் ரோல் குண்டுகளை வீசி தப்பி சென்றது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை இன்ஸ்பெக்டர் ஆண்டனி செல்லத்துரை மற்றும் போலீசார், பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக சிவகங்கை அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த அஜித் குமார் (வயது 21) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் (19) உசிலம் பட்டியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் சம்பந்தப்பட்ட நபர் களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story