சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 1:09 PM IST (Updated: 6 Dec 2021 1:09 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தீர்ப்பு 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு சேலம் மாவட்டம் காகாபாளையம் அருகே உள்ள நம்பியம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 30) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தங்கராஜ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 21.12.2016 அன்று நடந்தது. இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி தங்கராஜை கைது செய்தனர். அவர் மீது போக்சோ, கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை 
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Next Story