தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Dec 2021 5:04 AM GMT (Updated: 9 Dec 2021 5:04 AM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

இடையூறாக உள்ள ராட்சத குழாய்கள்

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் கண்ணகுருக்கை ஊராட்சியில் உள்ள ஏரியில் இருந்து பிமானந்தல் ஏரிக்கு உபரிநீர் செல்லும் நீரோடையின் நடுவே ராட்சத குழாய்கள் கிடக்கின்றன. அந்தக் குழாய்களை அகற்றினால் தண்ணீர் தேங்காமல் ஓடும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -முருகன், கண்ணகுருக்கை.

பஸ் இயக்கப்படுமா?

  கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வதற்கு காலை 5,7,9,11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லை. மேல்சோழங்குப்பம், கீழ்பாலூர் வழியாக செல்லும் தடம் எண்:44 என்ற பஸ்சை மேலாக்கொடி, கடலாடி, சிங்காரவாடி வழியாக இயக்கினால் மருத்துவமனை, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -ஆர்.ஜெகன்நாதன், கடலாடி.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பம்

  கண்ணமங்கலம் அருகே ஆரணி செல்லும் ரோட்டில் கொங்கராம்பட்டு கேட் பஸ் நிறுத்தம் உள்ளது. அதன் அருகில் வேலூர் மார்க்கமாக செல்லும் சாலையின் நடுவே ஒரு மின் கம்பமும், அதன் அருகில் மற்றொரு மின் கம்பமும் உள்ளது. சாலையின் நடுவே உள்ள மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராமன், கொங்கராம்பட்டு.
  

Next Story