4 தாசில்தார்கள் பணி இடமாற்றம்


4 தாசில்தார்கள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2021 2:12 PM GMT (Updated: 2021-12-16T19:42:37+05:30)

தேனி மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி: 

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு தாசில்தார் பணியிடம் சிறப்பு பணியிடமாக உருவாக்கி, மாவட்ட வருவாய் அலகில் இருந்து மாற்றுப்பணி அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு பணியிடம் உருவாக்கப்பட்டது. அந்த பணியிடத்தில் சிறப்பு தாசில்தாராக தேனி அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் பிரதீபா நியமிக்கப்பட்டார். இதனால், தேனி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அழகுமணி, தேனி அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராக பணி இடமாறுதல் செய்யப்பட்டார். 

அதுபோல், சின்னமனூர் நகர நிலவரித்திட்ட அலுவலர் ராணி, தேனி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், தேனி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் முருகேசன் சின்னமனூர் நகர நிலவரி திட்ட அலுவலராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பிறப்பித்துள்ளார்.


Next Story