வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2021 11:41 PM IST (Updated: 18 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணாபுரம்

வாணாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு 

திருவவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகில் உள்ள கூடலூர் மற்றும் காம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி, ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி, வளர்ச்சித்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளியில் ஆய்வு செய்தபோது, கட்டிடத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்ததைப் பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்து கட்டிடத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் உள்ள சேதமான கட்டிடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பள்ளிக்கூட சமையல் அறை, குடிநீர் தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணாபுரத்தை அடுத்த காம்பட்டில் மரக்கன்றுகள் நடும் பணிைய கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர், பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மதியம் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், பொறியாளர் சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசு, ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், ஊராட்சி செயலர் வெங்கடேசன், துணைத்தலைவர் ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் சித்ரா, சிவலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

அதைத்தொடர்ந்து பெருந்துறைபட்டு கிராமத்துக்கு சென்ற கலெக்டர் முருேகஷ், அங்கு புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி செல்வநாராயணர், ஊராட்சி செயலர் பாபு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story