2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 28 Dec 2021 7:45 PM GMT (Updated: 2021-12-29T01:15:06+05:30)

வாணியக்குடியில் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளச்சல், 
குளச்சல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு  குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அவர்கள், வாணியக்குடி பகுதியில் சென்றபோது, அங்கு ஒரு தென்னந்தோப்பில் சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த மூடைகளை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், கேரளாவுக்கு கடத்துவதற்காக 2 டன் மற்றும் 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னந்தோப்பில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story