மாவட்ட செய்திகள்

கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்ற 31 பேர் கைது + "||" + 31 arrested for selling cannabis, alcohol and tobacco

கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்ற 31 பேர் கைது

கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்ற 31 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 16 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 10 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 210 புகையிலைப் பாக்கெட்டுகள், 84 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 
31 பேர் கைது
அதன்படி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 29 வழக்குகள் பதிவு செய்து 31 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க 8 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க புதிதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
2. பீகாரில் ரெயிலை நிறுத்திவிட்டு ரெயில் ஓட்டுனர் மது அருந்த சென்றதால் பரபரப்பு..!
பீகாரில் ரெயில் ஓட்டுனர் மது அருந்த சென்றதால், பயணிகள் ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றது.
3. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்: கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீச்சு
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனா்.
4. கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5. ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்கள் நடந்த கஞ்சா வேட்டையில் 2,423 பேர் கைது செய்யப்பட்டனர்.