வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு


வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 29 Dec 2021 5:27 PM GMT (Updated: 29 Dec 2021 5:27 PM GMT)

வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினார்கள்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தினார்கள். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வருகிற 4-ந் தேதி மாலை 4 மணிக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி காலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 6-ந் தேதி காலை 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
----------

Next Story