திடீர் மழை


திடீர் மழை
x
தினத்தந்தி 30 Dec 2021 5:21 PM GMT (Updated: 2021-12-30T22:51:51+05:30)

சிங்கம்புணரி பகுதியில் திடீரென மழை பெய்தது.

சிங்கம்புணரி, 
 சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் சிங்கம்புணரி நகர், பிரான்மலை, காளாப்பூர், எஸ்.வி மங்கலம், சூரக்குடி, போன்ற பகுதிகளில் நேற்று மாலை விட்டு விட்டு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது. பல நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் கவலைக்கு உள்ளாகி வருகின்றனர். தற்சமயம் இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் விளை நிலங்களில் நெல் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் நேற்று பெய்த மழையால் பயிர்கள் அனைத்தும் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story