நெல்லை: லாரி, லோடு ஆட்டோக்களில் பேட்டரி திருடிய வாலிபர் கைது


நெல்லை: லாரி, லோடு ஆட்டோக்களில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2021 9:35 PM GMT (Updated: 2021-12-31T03:05:30+05:30)

லாரி, லோடு ஆட்டோக்களில் பேட்டரி திருடிய வாலிபர் கைது

நெல்லை:
நெல்லை தாழையூத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 49). லாரி உரிமையாளர். சம்பவத்தன்று இவரது லாரி மற்றும் அவரது நண்பர்கள் லாரி என 5 லாரிகளை அந்த பகுதியில் குவாரி ரோட்டில் நிறுத்தி இருந்தனர். நேற்று முன்தினம் பார்த்தபோது லாரிகளில் இருந்து 10 பேட்டரிகள் மாயமாகி இருந்தன. யாரோ மர்ம நபர் பேட்டரிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் கட்டுடையார் குடியிருப்பு புதுகாலனி தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (35). சம்பத்தன்று இவரது வீட்டின் முன்பு இவரும், அவருடைய நண்பரும் தங்களது லோடு ஆட்டோக்களை நிறுத்தி இருந்தனர். மறுநாள் காலை பார்த்த போது லோடு ஆட்டோக்களில் இருந்த 2 பேட்டரிகளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து தாழையூத்து போலீசில் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பேட்டரிகளை திருடியது நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (26) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தார்.

Next Story