மாவட்ட செய்திகள்

700 இடங்களில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccination camp

700 இடங்களில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

700 இடங்களில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 700 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 700 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி முதல் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26-ந்தேதி வரை 16 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

700 இடங்களில்...

மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 90 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 610 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 700 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த முகாம்களில் பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷீல்டு 65 ஆயிரம், கோவாக்சின் தடுப்பூசி 32 ஆயிரம் மருந்துகள் என மொத்தம் 97 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம்.

ஆதார் எண்

 எனவே இன்று(ஞாயிற்றுக்கிழமை) ெமகா தடுப்பூசி முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
வாய்மேட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
2. கொரோனா தடுப்பூசி முகாம்
வள்ளாலகரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
காவேரிப்பாக்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
4. கொரோனா தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.