சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை


சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Jan 2022 1:11 AM IST (Updated: 2 Jan 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

வத்திராயிருப்பு,
சதுரகிரி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சதுரகிரி 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 
முன்னதாக சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தளவாய்புரம் 
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர், அயன் கொல்லங்கொண்டான் அங்காள பரமேஸ்வரி, தொப்பையன் குளம் சுப்பிரமணியசுவாமி, தளவாய்புரம் பத்திரகாளியம்மன், கொமந்தபுரம் நடு மாரியம்மன், செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
இங்கு புத்தாண்டு தினத்தையொட்டி சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அன்பு மாடல்நகரில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து  பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story