விறகு ஏற்றி வந்த லாரி மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி
ஆலங்குடியில் விறகு ஏற்றி வந்த லாரி மோதியதில் தலை நசுங்கி தொழிலாளி பலியானார்.
ஆலங்குடி,
தலை நசுங்கி தொழிலாளி பலி
ஆலங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்து முகமது (வயது 42). இவர் ஆலங்குடி பாத்தம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக முத்து முகமது மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவரது தலையில் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்து முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, விபத்திற்கு காரணமான லாரியை கைப்பற்றி ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காயாம்பு (62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story