3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Jan 2022 6:25 PM IST (Updated: 6 Jan 2022 6:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருள்
எப்போதும் வென்றான் நடுத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் அப்பணசாமி (வயது 44). இவரையும் குளத்தூர் பெரியார்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (35) என்பவரையும், புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த போது எப்போதும் வென்றான் போலீசார் கைது செய்தனர். இதே போன்று திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் என்ற மணி (56) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக திருச்செந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம்
இதைத் தொடர்ந்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். 
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அப்பணசாமி, மாரியப்பன், மணிகண்டன் என்ற மணி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

Next Story