போலி டாக்டர் கைது
தூசியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தூசி
தூசியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆங்கில சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 54). இவர், மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்து வருவதாக வெம்பாக்கம் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சங்கரலிங்கம் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது ஆங்கில மாத்திரை, மருந்து மற்றும் ஊசிகள் இருந்தன.
கைது
இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி டாக்டர் சங்கரலிங்கத்தை கைது செய்தார்.
கைதான சங்கரலிங்கம் 8-ம் வகுப்பு வரையே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story