வாலிபருக்கு அரிவாள் வெட்டு
களக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பாணாங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முத்து என்ற முத்துக்குமார் (வயது 22). தொழிலாளியான இவரும், சிங்கிகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குரளி வானமாமலை என்ற வானமாமலையும் நண்பர்கள் ஆவார்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதும் வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வானமாமலை முத்துக்குமாரின் உறவினர்களுக்கு ஆதரவாக பேசியதுடன், முத்துக்குமாரையும் கண்டித்துள்ளார். இதனால் வானமாமலை மீது முத்துக்குமாருக்கு ஆத்திரம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமாா், வானமாமலை, வானமாமலையின் நண்பர் நாங்குநேரியை சேர்ந்த ஐகோர்ட் ராஜாவும் மது அருந்துவதற்காக களக்காடு அருேக உள்ள சிங்கிகுளம்-மேல்கரை ரோட்டிற்கு சென்றனர். அப்போது முத்துக்குமார், தனது உறவினர்களுக்கு ஆதரவாக வானமாமலை தன்னுடன் தகராறு செய்ததை தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வானமாமலை, ஐகோர்ட் ராஜா ஆகியோர் சேர்ந்து முத்துக்குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இரும்பு கம்பியாலும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா வழக்குப்பதிவு செய்து வானமாமலை, ஐகோர்ட் ராஜா ஆகியோரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story