மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு + "||" + Study

அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் கலெக்டர்  ஆய்வு
அருப்புக்கோட்டை அருகே அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை, 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அறிகுறிகள் தென்படுபவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்துகொள்ளவும், தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் வசதி செய்துள்ளது. இந்தநிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தொற்றினை கண்டறிவதற்காகவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள், பரிசோதனை மையங்கள் மற்றும் ஆலோசனை மையங்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.கல்யாணகுமார், இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் சண்முகசுந்தரம், தாசில்தார் அறிவழகன், மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கடைகளில் ஆய்வு
சிவகிரி பகுதியில் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. சைக்கிளில் சென்று ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
சைக்கிளில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
3. ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
4. பேரையூர், டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு
பேரையூர்,டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
5. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.