மாவட்ட செய்திகள்

தொழிலாளி திடீர் சாவு + "||" + Sudden death of worker

தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீர் சாவு
சிவகிரியில் தொழிலாளி திடீரென்று இறந்தார்.
சிவகிரி:

சிவகிரி அண்ணா தெற்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் புத்தர் என்ற முருகன் (வயது 33). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சிவகிரிக்கு வடக்கே குமாரபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் முருகன் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் நிர்வாகி திடீர் சாவு; போலீசார் விசாரணை
வடக்கன்குளத்தில் கோவில் நிர்வாகி திடீரென இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கட்டிட தொழிலாளி திடீர் சாவு
நெல்லை மேலப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார்.
3. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீர் சாவு
கோவில் விழாவில் பங்கேற்று திரும்பிய ராணுவ வீரர் திடீரென இறந்தார்.
4. லாரி டிரைவர் திடீர் சாவு
திசையன்விளை அருகே லாரி டிரைவர் திடீரென்று இறந்தார்.
5. திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை
திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை