வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்


வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 11 Jan 2022 1:04 AM IST (Updated: 11 Jan 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். அங்குள்ள கோவில் அருகில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். 

நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் வெளியே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட ஒரு வாலிபர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், வெள்ளி கால் கொழுசு மற்றும் ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வெளியே வந்தார்.

அவரை பொதுமக்கள் பிடித்துக்கொண்டனர். இதுபற்றி அம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிப்பட்ட வாலிபரை விசாரித்ததில் அவர் நாராயணபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 19) என தெரியவந்தது. அவரிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.

Next Story