சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 9:22 PM IST (Updated: 11 Jan 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சின்னசேலம்

சின்னசேலம் அருகே இந்திலி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகள் வர்ஷா(வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அரையாண்டு தேர்வில் வர்ஷா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரை அவரது தாய் ரமணி சரியாக படிக்கவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வர்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story