வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி  இன்று சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 2:59 PM GMT (Updated: 12 Jan 2022 2:59 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு இன்று காலை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெறுகிறது. 
புதுப்பொலிவு
வைகுண்ட ஏகாதசியைெயாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சொர்க்கவாசல் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
8 மணிக்குமேல் அனுமதி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.  காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story