ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:25 PM IST (Updated: 12 Jan 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை வழியாக சேலத்தை நோக்கி சென்று ெகாண்டிருந்தது.

அந்த ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஏறி சோதனை செய்தனர். அதில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியின் கழிவறை அருகில் கருப்பு நிற பை கிடந்தது. அதை எடுத்து போலீசார் திறந்து பார்த்தனர். 
அதில் 3½ கிலோ
 எடையில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. கஞ்சாவை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வேலூர் போதைப் பொருள் ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story