போலீஸ்காரா் உள்பட 72 பேருக்கு கொரோனா


போலீஸ்காரா் உள்பட 72 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 11:34 PM IST (Updated: 12 Jan 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த போலீஸ்காரர் உள்பட மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது நேற்று முன்தினத்தை விட 32 பேர் அதிகம் ஆகும். 

இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 33 ஆயிரத்து 591 ஆனது. அதேநேரம் நேற்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 32 ஆயிரத்து 768 பேர் குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story