மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம் + "||" + In Mayiladuthurai, the BJP won Human chain struggle

மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:
பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மனித சங்கிலி போராட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு பிரசார அணி மாவட்ட தலைவர் அய்யா சுரேஷ் தலைமை தாங்கினார். ெநசவாளர் அணி மாவட்ட செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் வக்கீல் பிரிவு மாநில தலைவர் வக்கீல் ராஜேந்திரன், நகர தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோஷங்கள்
போராட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்ட செயலாளர் டி.கே.பன்னீர்செல்வம், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் ஈழவேந்தன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் குருசங்கர், நகர செயலாளர்கள் கார்த்தி, ராமு, மணிமேகலை, நகர பொருளாளர் தாமரைக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மயிலாடுதுறையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மயிலாடுதுறையில், நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி மயிலாடுதுறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் பிளாஸ்டிக் மாலைகளை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.