மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுசேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை + "||" + Rise in the price of flowers

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுசேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுசேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
சேலம், 
பூக்கள் விலை உயர்வு
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.
மேலும் பூக்களின் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படும்.. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதால் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. அதாவது, குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சன்னமல்லி, அரளி
இதேபோல் சன்னமல்லி கிலோ ரூ.1,500-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், காக்கட்டான் ரூ.900-க்கும் விற்பனையானது. மேலும் அரளி, வெள்ளை, செவ்வரளி ஆகியவை கிலோ ரூ.260-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், சாமந்தி ரூ.200-க்கும் நந்தியாவட்டம் ரூ.120-க்கும், கலர் ரோஜா பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, கடந்த வாரம் பூக்கள் விலை குறைந்திருந்தது. ஆனால் பொங்கல் பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகியவை முன்னிட்டும் மற்றும் வரத்து குறைவாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றனர்.