நெல்லை போலீஸ் சரகத்தில் `கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து ஒழிக்கப்படும்' புதிய டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பேட்டி


நெல்லை போலீஸ் சரகத்தில் `கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து ஒழிக்கப்படும் புதிய டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 10:16 PM GMT (Updated: 12 Jan 2022 10:16 PM GMT)

புதிய டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பேட்டி கொடுத்தரர்

நெல்லை:
நெல்லை போலீஸ் சரகத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி முற்றிலும் ஒழிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கூறினார்.
பொறுப்பு ஏற்பு
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.‌ஜி.யாக இருந்த பிரவீன்குமார் அபிநபு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை போலீஸ் சரகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, ரவுடிகளை ஒடுக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். சாதி மோதல்கள் ஏற்படாமல் அனைவரும் சமத்துவமாய் வாழ வழிவகை செய்யப்படும்.
கட்டப்பஞ்சாயத்து
தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை சரகத்திலும் கஞ்சா வியாபாரிகளை களை எடுப்போம். குழந்தைகள் தொடர்பான குற்றச்செயலில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு போலீஸ் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்படும். நெல்லை சரகத்தில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வகித்த பதவிகள்
புதிதாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், 2007-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று பரமக்குடி, நாமக்கல், கன்னியாகுமரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், கோவை மாநகரில் துணை போலீஸ் கமிஷனராகவும், வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.
பின்னர் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றினார். தற்போது நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்றுள்ளார்.

Next Story