மாவட்ட செய்திகள்

ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 18-ந் தேதி வரை தடை + "||" + okenakkal falls

ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 18-ந் தேதி வரை தடை

ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 18-ந் தேதி வரை தடை
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 18-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
தர்மபுரி:-
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 18-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
ஒகேனக்கல்
தமிழகத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஒகேனக்கல் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழாவின்போது ஒகேனக்கல்லுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள் வர 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
18-ந் தேதி வரை
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி இன்று\(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரைசுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் வர தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.