ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறியீடு


ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறியீடு
x
தினத்தந்தி 13 Jan 2022 2:48 PM GMT (Updated: 13 Jan 2022 2:48 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடை வெளியை கடைபிடிக்க குறியீடு வரையப்பட்டு உள்ளது.

ஊட்டி

கொரோனா பரவலை தடுக்க ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடை வெளியை கடைபிடிக்க குறியீடு வரையப்பட்டு உள்ளது. 

ஊட்டி நகராட்சி மார்க்கெட்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் நெருக்கமாக உள்ளதால் கூட் டம் கூடுவதை தவிர்க்க காய்கறி, பழக்கடைகள் என 194 கடைகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றுவதாக இருந்தது. இதற்காக அளவீடு செய்து கோடுகள் போடப்பட்டன. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவுரையின்படி வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மார்க்கெட்டில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைபிடிக்க தரையில் குறியீடு போடுவது, வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ கடை முன்புறம் வாளியில் தண்ணீர், சோப்பு அல்லது கிருமிநாசினி வைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்று உறுதி அளித்தனர். 

குறியீடு போடப்பட்டது

இதையடுத்து கடைகள் இடமாற்றம் செய்யப்படவில்லை. ஊட்டி மார்க் கெட்டில் கடைகளுக்கு முன்பு பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. அத்துடன் அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க குறியீடுகளும் வரையப்பட்டு உள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட இடத்தில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறும்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் கடைகளை மாற்றும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மார்க்கெட் உட்புறம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது என்றார்.


Next Story