தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Jan 2022 3:00 PM GMT (Updated: 13 Jan 2022 3:00 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

தினத்தந்திக்கு நன்றி 
பழனி நகராட்சி 5-வது வார்டு இந்திராநகர் பாரதிதெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவுநீர் தேங்கி நின்றது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சாக்கடை கால்வாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதற்காக தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நனறியை தெரிவித்து கொள்கிறோம். -மாரிமுத்து, பழனி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி பேரூராட்சி டி.வி.நகர் பெருமாள்கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் செல்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், தேவதானப்பட்டி.
குழந்தைகள் மைய மேற்கூரை சேதம்
கம்பத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மைய கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து விட்டது. இதனால் குழந்தைகளை மையத்துக்கு அனுப்பவே பயமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கூரையை சரிசெய்ய வேண்டும். -முருகேசன், கம்பம்.
எரியாத தெருவிளக்கு 
பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரிக்கு எதிரே உள்ள தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். -ரவிச்சந்திரன், பழனி.


Next Story